” பல உதிரிகளாகப் பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணியென தற்போது ஒன்றும் இல்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி உரிய வகையில் நிறைவேற்றிவருகின்றார். அனைத்து உறுதிமொழிகளையும் 24 மணிநேரத்துக்குள் நிறைவேற்றிவிட முடியாது. கட்டம், கட்டமாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தின் பயணம் சாதகமாக உள்ளது. எதிரணிகள் வங்குரோத்தடைந்துள்ளன. அதனால்தான் எதையாவது கதைகளைக்கூறி அரசியல் நடத்துகின்றன.
மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை முதலில் பிடிக்க வேண்டும். அதற்பிறகு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன்பின்னரே பதுக்கப்பட்ட பணத்தை மீட்க முடியும்.” – என்றார்.