வட கொரிய ஜனாதிபதி கிம்மை மீண்டும்
சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த நேர்காணலின்போது வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை தான் இரண்டு முறை சந்தித்ததை ட்ரம்ப் நினைவு கூர்ந்துள்ளார்.
“கிம் மதவெறியர் அல்லர் அவர் ஒரு புத்திசாலியான நபர்.” என்றும் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி, வட கொரிய ஜனாதிபதி சந்திப்பு வரலாற்றிலேயே முதன்முறையாக ட்ரம்ப் காலத்தில்தான் நிகழ்ந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
வடகொரியா அமெரிக்காவையும், தென் கொரியாவையும் தன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அதனாலேயே தொடர்ந்து பல்வேறு ஆயுத சோதனைகளை நடத்துகிறது.
வட கொரியாவும் ரஷ்யாவும் நட்பு நாடுகள். வட கொரியா நிகழ்த்தும் அணு ஆயுதச் சோதனைகள் உலகளவில் கண்டனக் குரல்களைப் பெற்றாலும் ரஷ்யா அதனை விமர்சிப்பதில்லை. இந்நிலையில் தான் மீண்டும் வட கொரிய ஜனாதிபதி சந்திக்கும் திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார் டொனாலட் ட்ரம்ப்.