வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைக்கு இ.தொ.கா. எதிராக நிற்காது!

” இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு எதிரான கட்சி கிடையாது.தனி நாட்டு கோரிக்கையை ஏற்கமறுத்தே அன்று சௌமியமூர்த்தி தொண்டமான் வெளியேறினார்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான T.V. சென்னன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்தில் மாத்திரமின்றி இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் சிங்கள மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவையும் பேணி வருவதால் தனிநாட்டு கோரிக்கையை ஏற்று கொள்ள முடியாது என்று அக்காலத்திலேயே அக்கூட்டணியில் இருந்து சௌமியமூர்த்தி தொண்டமான் வெளியேறினார். எனவே தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் காட்டிய வழியையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றது.

இன்றைய காலப்பகுதியில் ஒருசிலர் வடகிழக்கு மக்களுடன் இணைந்து இந்திய வம்சாவளி மக்களையும் போராட்ட வழியில் ஈடுபடுத்த முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – எனவும் அவர் கூறினார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles