வடக்கு மீனவர்களை வளைத்துபோட சீனா சதி!

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினையை பயன்படுத்தி வடக்கு மீனவர்களை தன்வசப்படுத்துவதற்கு சீன பல யுக்திகளை கையாண்டுவருகின்றது எனவும், இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அத்துடன், சீனா இராணுவம் வடக்குக்கு வரவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது எனவும், இதனையும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய செல்வம் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளால் எமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் நூற்றுக்கணக்கான ரோலர் படகுகள் வருகின்றன. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது அது அநீதியான கைது எனக் கூறுபவர்கள், எமது மீனவர்களின் துன்பநிலை பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும். மீனவர் பிரச்சினை சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் இந்தியா தட்டிக்கேட்கும் என எமது மக்கள் நம்புகின்றனர், எனவே, மீனவர் பிரச்சினையிலும் நியாயமான தீர்வு அவசியம் என்பது எமது கோரிக்கை.

மீனவர் பிரச்சினையை அடிப்படையாக வைத்து எமது மீனவர்களை தன் வசப்படுத்துவதற்கு சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டுவருகின்றது. இதனை எம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அதுமட்டுமல்ல சீன இராணுவம் எமது பகுதிக்கு வரவுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. எமது வடக்க, கிழக்கு மண்ணில் இலங்கை இராணுவத்தால் எமது மக்கள் ஏற்கனவே துன்பங்களை அனுபவித்துவிட்டனர். காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அரச திணைக்களங்கள் காணிகளை பிடிக்கின்றன. எமது பூர்வீகத்தை இல்லாது செய்யும் முயற்சியும் இடம்பெறுகின்றது. எமது வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. துப்பாக்கிச்சத்தம் இல்லாவிட்டாலும் போர்க்சூழலில்தான் எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு இலங்கையின் முப்படைகளால் ஆக்கிரமிப்பைக்கொண்டுள்ள எமது வடக்கு, கிழக்குக்கு சீனாவின் இராணுவம் வர இருக்கின்றதாம், ஏன் வருகின்றார்கள் என தெரியவில்லை, இதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதா? இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இதற்கு அனுமதி வழங்க முடியாது. எமது மீனவர்களை சீனா தன்வசப்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles