ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, தேசிய மக்கள் சக்திக்காகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காகவே அவர் வருகை தரவுள்ளார்.
அத்துடன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று யாழ்ப்பாணம் வருகின்றார். தீவகப் பகுதிகளில் அவர் தீவிர பரப்புரைகளில் ஈடுபடவுள்ளார்.
பொதுத்தேர்தலின்போது வடக்கில் கிடைத்த ஆதரவை உள்ளூராட்சித் தேர்தலிலும் தக்கவைத்துக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி தீவிரம் காட்டிவருகின்றது. அண்மைக்காலமாகத் தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டப் பிரமுகர்கள் வடக்குக்குத் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.