“வடமாகாண அபிவிருத்திக்கு முழு ஆதரவு”

வடமாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்ட வேலைகளுக்காக தன்னால் இயன்ற முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக, நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அவர்கள் இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles