வட்டகொடையிலும் ஒருவருக்கு கொரோனா! நகரத்தை முடக்க ஏற்பாடு!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புப்பட்டரெனவும் குறித்த தொற்றாளியை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று 27/10/2020 செவ்வாய்க்கிழமை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டு 28/10/2020 பீ.சீ.ஆர் முடிவில் குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொட்டக்கலை -தலவாக்கலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் தெரிவித்தார்.

யொக்ஸ்போர்ட் தோட்டம் முழுவதும் தொற்று நீக்கிகளைத் தெளிப்பதற்கும் தொற்றாளியை கந்தக்காடுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். மேலும் வட்டக்கொடை நகரத்தை தற்காலிகமாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நமது நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles