கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இபோச பஸ்ஸொன்று வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளானதில் 18 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வட்டவளை சிங்கள பாடசாலை அருகில் வைத்தே இன்று அதிகாலை சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.
கௌசல்யா, ந. சுசிதரன்