நுவரெலியா மாவட்டம், ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடம் ஒன்று கட்டடப்பட்டு அதன் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஹட்டன் – கொழும்பு பிரதான பாதைக்கு அருகில் அமைந்துள்ள இப்பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவந்த கட்டடம், பிரதான பாதையின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்தே இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனை மீண்டும் மண்சரிவு ஏற்பாடத வகையில் திருத்தி அமைக்குமானால், பாடசாலையின் கட்டட நிர்மாண பணிகளை முன்னெடுக்க முடியும். மலையக மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கவும் முடியும். இதனை உணர்ந்து செயற்பட வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும் என கல்வி சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்