வட்டவளை, பொகவந்தலாவை உட்பட 4 பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா

ஹட்டனில் வட்டவளை, பொகவந்தலாவை உட்பட நான்கு பகுதிகளில் ஆறு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று (4) வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவுகளிலேயே இவர்களுக்கு வைரஸ்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள்  மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.
ஹட்டன், சென்பகவத்தையில் ஒருவருக்கும், வட்டவளை லொனக் தோட்டதில் ஒருவருக்கும், பொகவந்தலாவை லின்போல்ட் தோட்டத்தில் ஒருவருக்கும், நோட்டன் தண்டுகலா கீழ் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்குமே (தாய்,இரு மகள்மார்) இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles