வட்ஸ்அப் செயலியில் மாற்றம்

உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமான தளமான வட்ஸ்அப் ஏற்கனவே தொலைபேசி செயலியாக பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், வட்ஸ்அப் வெப் (Whatsapp web) ஆக கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இருப்பினும், வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface மற்றும் ஏனைய அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் உள்ளதால், கணினிகளில் பயன்படுத்தும் வகையில் வட்ஸ்அப் பீசி (WhatsApp PC) என்ற செயலியை உருவாக்க மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Windows க்காக வட்ஸ்அப் பீட்டா ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், விரைவில் Windows மற்றும் Mac OSக்காக மேம்படுத்தப்பட்ட வட்ஸ்அப் பிசி (WhatsApp PC) என்ற செயலி வெளியிடப்படவுள்ளதாக பிரபல இத்தாலிய இணையத்தளமான Aggiornamenti Lumia One வெளியிட்ட சில ஸ்கிரீன் ஷோட்கள் மற்றும் GIFகளை மேற்கோள்காட்டி GSMArena இணையத்தளம் தெரிவித்துள்ளது. Windows 11 இன் theme ஆக உள்ள, transparent color panel உடன் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த செயலியில், பயன்பாட்டை விட்டு வெளியேறியுள்ள போதிலும் notification கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய செயலி மூலம் கணினிகளில் விரைவாக வட்ஸ்அப்பை செயற்படுத்த முடியும் எனவும், டச் டிஸ்பிளேக்கு ஏற்ற வகையில் வரைதல் அம்சம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த செயலியில் வட்ஸ்அப் கணக்கு, அரட்டைகள், Notifications உட்பட 6 பிரிவுகள் அடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வட்ஸ்அப் வெப்பில் காணப்பட்ட வரம்புகள் இந்தச் செயலியில் தவிர்க்கப்படும் என்றும், விரைவில் இது தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles