வட கொரிய ஜனாதிபதியுடன் இன்று வரை நல்ல நட்புறவில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
நோட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் இருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன் குறித்து எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்,
முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது வட கொரிய அதிபர் கிம்ஜோங் உன்னை பல முறை சந்தித்து உச்சி மாநாடு நடத்தியுள்ளேன். வட கொரியா அணு சக்தியை கொண்ட நாடு தான். அவருடன் இன்று வரை நான் நல்ல நட்புறவில் உள்ளேன் என பதிலளித்தார்.
அணு ஆயுத குறைப்பு குறித்து அவரிடம் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வீர்களா என கேள்வி எழுப்பிய போது, வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே பிற நாடுகளிடமும் உள்ளது. இருப்பினும் வடகொரியாவின் அணு ஆயுத எண்ணிக்கையைக் குறைக்க முடிந்தால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். என கருதுகிறேன் என ட்ரம்ப் பதிலளித்தார்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
‘ டிரம்ப் கருத்துக்கள் வட கொரியாவின் அணு ஆயுதங்கள் குறித்த கொள்கையில் தனது முதல் பதவிக்காலத்தில் செய்தது போலவே, வட கொரியாவின் முழுமையான அணு ஆயுதக் குறைப்பைத் தொடருவார்.” என்று குறிப்பிட்டார்.