நோர்வூட், வனராஜா பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 6 மணியளவில் ‘எரிவாயு அடுப்பு’ வெடித்துள்ளது.

இதனையடுத்து வீட்டார் துரிதமாக செயற்பட்டு, ‘கேஸ் சிலிண்டரை’ அப்புறப்படுத்தினர். இதனால் தீ விபத்து சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும், நோர்வூட் பிரதேச சபை தலைவருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல், பாதிப்பு ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்டதுடன் ,பாதிக்கப்பட்ட நபரிடமும் கலந்துரையாடினார். கேஸ் பாவனை தொடர்பில் தற்போது விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கினார்.
பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
