வனவிலங்குகள் வலையில் சிக்குண்ட நிலையிலோ அல்லது விபத்துக்குள்ளான நிலையிலோ இருந்தால் வன பாதுகாப்பு திணைக்களத்தின் 1992 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உடன் அறிவிக்குமாறு உலக முடிவில் உள்ள தேசிய வன பாதுகாப்பு உயர் அதிகாரி பி.எம்.பி.கே.பிரதீப் குமார தெரிவித்தார்.
மேலும்,வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வனவிலங்குகள் விபத்துக்குள்ளாகி காயமுற்ற நிலையில் காணப்படும் போது சிகிச்சை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க இலகுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மலையக பகுதிகளில் வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுவதால் சிலர் கம்பி வலை பயன்படுத்தி வேட்டையாடுவதாகவும் அவ்வாறான ஒரு சில கம்பி வலைகளில் சிக்கிய சிறுத்தைகளை சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாது போயுள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே பொது மக்கள் வனவிலங்குகளை பாதுகாக்க தமது பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.