வன்முறை – 105 பேர் பலி! பங்களாதேஷில் ஊரடங்கு!

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பங்களாதேஷில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட இராணுவத்தை அனுப்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் குண்டை பயன்படுத்தினர்.

கடந்த 1971ஆம் ஆண்டு நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை பாதிக்கும் அதிகமான இடஒதுக்கீடு வழங்கப்படுவதை இரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமான முறையில் பங்களாதேஷின் சுதந்திர போராட்டத்தை வழிநடத்திய அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக உள்ளது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் வேலைவாய்ப்பு தகுதியின் அடைப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் வாதிடுகின்றனர்.

என்றாலும் இடஒதுக்கீடு முறைக்கு ஆதரவாக பேசியிருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனா, அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், படைவீரர்களின் பங்களிப்புக்கு அதிக மரியாதை தரப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

Related Articles

Latest Articles