இந்தியா, கேரள மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.
கடந்த ஜூலை 30ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட் டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண் எணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.
சடலங்கள் ஒரே இடத்தில் அட க்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அழுகிய நிலையில் மீட்கப்படும் சடலங்கள் நீலம் பூர் பகுதியில் அடக்கம் செய்ய ப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.224 சடலங்களும், 181 உடல் உறுப்புகளும் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநில அரசால் அமைக்கப்பட்ட 93 நிவாரண முகாம்களில் கிட்டத்தட்ட 10,042 பேர் தங்கியுள்ளனர் என்றும், சாலியாறு ஆற்றங்கரையில் பேரிடர் பாதித்த பகுதிகளில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கேரள முதலமைச்சர் விஜயன் கூறினார்.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 107 என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இடிபாடுகளுக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட 209 இறந்த உடல்களில், 67 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மொத்த இறப்பு எண்ணிக்கை 400 ஐ தொடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைக் கூட்டினால், இறப்பு எண்ணிக்கை 500-ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.