அநுராதபுரம், கல்நெவ பகுதியில் வயலுக்கு வந்த காட்டு யானைக்குட்டியை சுட்டுக் கொன்று இரகசியமாக புதைத்தனர் எனக் கூறப்படும் ஐவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்நெவ பிரதேசத்தை சேர்ந்த 42 முதல் 50 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
5 அடி உயரமுடைய 5 வயது காட்டு யானைக்குட்டியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளது.
கல்நெவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய பிரதான சந்தேக நபர் தனது வயலுக்கு வந்த காட்டு யானைக்குட்டியை தனது துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
சந்தேக நபர் உயிரிழந்த யானையின் சடலத்தை அயலவர்களின் உதவியுடன் தனது தோட்டத்திலேயே இரகசியமாக புதைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் மீகலாவ வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரி ஐ.எம்.ஜி.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
