வரி திணைக்களத்துக்கு முன்பாக துக்க சோறு சமைத்து எதிர்ப்பு – காகமும் அழைப்பு

ரணில் – ராஜபக்ச அரசின் இறுதி பயணம் ஆரம்பித்துவிட்டது என சுட்டிக்காட்டி, உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு முன்பாக துக்க சோறு சமைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து, இவ்வாறு துக்க சோறு சமைத்து எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு துக்க சோறு சமைத்து , ‘காகங்களுக்கும்’ வைக்கப்பட்டன. ‘கா, கா, என காகங்களை அழைத்ததுடன், காகம் அமெரிக்கா சென்றுவிட்டது என பஸில் ராஜபக்சவையும் மறைமுகமாக சாடினர்.

நாட்டு மக்களுக்கு உண்பதற்கு வழியில்லை. அதனை வெளிப்படுத்தும் விதமாகவும், வரிகளை குறைக்குமாறு வலியுறுத்தியுமே இவ்வாறு செயற்பட்டோம் என சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வரி திணைக்கள அதிகாரிகள் முறையாக செயற்பட்டால், முறையாக வரிகளை வசூலித்தால் அரச வருமானம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டனர்.

Related Articles

Latest Articles