வரி விதிப்பு தடையை நீக்க உயர்நீதிமன்றை நாடியது ட்ரம்ப் நிர்வாகம்!

 

உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்​வாகம் மனுத் தாக்​கல் செய்​துள்​ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்​வாகத்​தின் வர்த்தக கொள்​கை​யில் பரஸ்பர வரிவ​திப்பு முறை கொண்​டு​வரப்​பட்​டது.

இந்த புதிய வர்த்தக கொள்​கையை ஏற்​கும்​படி ஐரோப்​பிய யூனியன், ஜப்​பான் மற்​றும் இதர நாடு​களை ஜனாதிபதி ட்ரம்ப் வலி​யுறுத்​தி​னார். இதன் காரண​மாக அமெரிக்​கா​வின் வரி வரு​வாய் கடந்த ஆகஸ்ட்​டில் 159 பில்​லியன் டால​ராக உயர்ந்​தது.
இது கடந்​தாண்டு இதே காலத்​தில் வசூலிக்​கப்​பட்ட வரியை விட இரண்டு மடங்​குக்கு மேல் அதி​கம்.

ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​யும் சீனா, இந்​தியா போன்ற நாடு​களுக்கு அபராத​மாக இறக்​குமதி வரி மிக அதி​கள​வில் உயர்த்​தப்​பட்​டது. இதனால் சீனா மற்​றும் இந்​தி​யா​வில் இருந்து அமெரிக்கா இறக்​குமதி செய்​யும் பொருட்​களின் விலை அதி​கரித்​தது.

இந்த வரி​வி​திப்பு முறையை எதிர்த்து அமெரிக்​கா​வின் மேல் முறை​யீட்டு நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டது, இதை விசா​ரித்த மேல் முறை​யீட்டு நீதி​மன்​றம், அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதல் பெறாமல், வெளி​நாடு​களுக்​கான இறக்​குமதி வரியை ஜனாதிபதி ட்ரம்ப் அதி​கரித்​தது சட்​ட​விரோதம் என கூறியது. இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​வோம் என அதிபர் ட்ரம்ப் கூறி​யிருந்​தார்.

அதன்​படி அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தில் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத்​தாக்​கல் செய்​துள்​ளது. அதில், ‘‘அமெரிக்க ஜனாதிபதி வர்த்தக கொள்கை குறித்து கடந்த 5 மாதங்​களாக பேச்​சு​வார்த்தை நடத்​தி, புதிய வரி​வி​திப்பு முறையை கொண்டு வந்​துள்​ளார். இது வரி விதிப்பு நடை​முறை​யில் ஒழுங்கை ஏற்​படுத்த உதவியது. இதை சட்​ட​விரோதம் என அமெரிக்க மேல் முறை​யீட்டு நீதி​மன்​றம் கூறி​யுள்​ளது.

இந்த முடிவு வெளி​நாடு​களு​டன் ஜனாதிபதி மேற்​கொண்ட வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் நிச்​சயமற்ற நிலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதன் காரண​மாக வரி விதிப்பு பாதிக்​கப்​பட்​டால், ஏற்​கெனவே வசூலித்த இறக்​குமதி வரி​களை திருப்பி செலுத்த வேண்​டி​யிருக்​கும். இது அமெரிக்கா​வுக்கு நிதி நெருக்​கடியை ஏற்​படுத்​தும்.

அதனால், அவசர​கால சட்​டத்தை பயன்​படுத்தி ஜனாதிபதி ட்ரம்ப் கொண்​டு​வந்த வரி விதிப்பு சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை உச்​சநீதி​மன்​றம்​ விரைந்​து வி​சா​ரித்​து ரத்​து செய்​ய வேண்​டும்” என​ கூறப்பட்டுள்​ளது.

Related Articles

Latest Articles