வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சி இன்று

வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று (03) நள்ளிரவு முதல் கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.

மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி க்ளார்க் மையத்தின் சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய தெரிவித்தார்.

நாளை (04) அதிகாலை 2 மணிக்கு அதனை மேலும் தெளிவாக அவதானிக்க முடியும்.

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெளிவாக பார்வையிட முடியும் என்பதுடன், தெளிவான வானிலை நிலவும் பகுதிகளிலும் எரிக்கற்கள் வீழ்ச்சியினை காண முடியும் என சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய தெரிவித்தார்.

Related Articles

Latest Articles