வருடாந்தம் 150 மாணவர்களின் உயிர்களை பலியெடுக்கும் ‘விபத்துகள்’!

நாட்டில் வருடாந்தம் சுமார் 150 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துகளில் பலியாகின்றனர் என பொலிஸ் போக்குவரத்து பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து பொலிஸாரின் தரவுகளின்படி, பிரதான வீதிகளில் ஏற்படும் வாகன விபத்துகளில் தினமும் 6 பேர் உயிரிழக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

இதன்படி, ஒவ்வொரு 4 மணியத்தியாலங்களுக்கும் ஒருவர் உயிரிழக்கின்றனர்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதானாலேயே இந்த விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் 18 வயதுக்குட்பட்ட 115 சிறுவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸாரின் தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles