வருட ஆரம்பத்திலேயே மிரட்டுகிறார் வடகொரிய ஜனாதிபதி….!

” 2024 ஆம் ஆண்டில் மேலும் மூன்று இராணுவ உளவு செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம்.” – என்று வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன் அறிவித்துள்ளார்.

அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா போர் உபகரணங்கள் கட்டமைக்கப்படும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுஎனகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது .இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன.

அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியடிக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் வடகொரியா சமீபத்தில் இராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையிலேயே வடகொரிய ஜனாதிபதி மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles