இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வு பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களை சமநிலைப்படுத்துவதற்கான பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.