நானுஓயா நகரில் வர்த்தகர் ஒருவர்மீது இன்று கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த வர்த்தகர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
பண கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி, பின்னர் கத்திக்குத்தில் வந்து முடிந்துள்ளது.
சகோதரர்கள் இருவரே தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும், சம்பவத்தின் பின் அவர்கள் பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நானுஓயா நிருபர்
