வற் வரி அதிகரிப்பால் மக்கள் திண்டாட்டம்! ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டம்!!

” நாடு எவ்வாறு வங்குரோத்தானது என்பதையும் அதைச் செய்தவர்களையும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்தினாலும், வங்குரோத்தான நாட்டின் ஆட்சியாளர்கள்கூட இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வற் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததால்,முட்டை மற்றும் வெங்காயத்தின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறு வரியை அதிகரித்து இதனை ஓர் குதூகலமாக கருதி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இரவு நேரங்களில் மாளிகைகளில் விருந்துகளை நடாத்தி ஆரவாரத்துடன் மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்றனர் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் இவ்வாறானதொரு அவல நிலை ஏற்பட்டுள்ள இவ்வேளையில் அவர்கள் நத்தார் பண்டிக்கைக்கும் பத்தாண்டுக்கும் மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles