அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் தொடர்ந்து நான்கு நாட்களாக செய்து வரப்படுகிறது.
முதலில் வலிமை படத்தின் 1 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. இதன்பின் 4 மணி காட்சி தான் வலிமை படத்திற்கு முதல் காட்சி என்று கூறப்பட்டிருந்தது.
இதனால், அஜித்தின் ரசிகர்களுக்கும் வலிமை படத்தின் 4 மணி காட்சியை திரையரங்கில் கொண்டாட ஆர்வமாக காத்திருந்தனர்.
இந்நிலையில், வலிமை படத்திற்காக அதிகாலை 4 மணி காட்சியும் ரத்து என அதிர்ச்சியளிக்கும் தகவலை பிரபல ரோகினி திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.