வலுசக்தி அமைச்சரின் சாரதி கொலை-பிரதான சந்தேக நபர் கைது

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட பகையின் காரணமாக பிலியந்தலை – மாவிட்ட பகுதியில் வைத்து அமைச்சரின் வாகன சாரதி நேற்று தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles