நட்டின் பொருளாதாரத்தில் தற்போது முன்னேற்றகரமான நிலை காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் நிலவிய பொருளாதார நிலைமை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுலாத்துறை படிப்படியாக முன்னேற்றம் கண்டு வரும்நிலையில் ஏனைய துறைகளின் முன்னேற்றமும் குறிப்பிடத்தக்க வகையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு விஜயம் செய்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்திந்தித்து ஆசிபெற்றுக்கொண்டுள்ளதையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டில் டொலருக்கான தட்டுப்பாடு தொடரும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக சுமார் 1700 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் தொடர்பில் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுனர்.










