வழுக்கி விழுந்து வயோதிபர் பலி! சாமிமலையில் சோகம்!!

அடை மழையின்போது பாலத்தின் வழியாக செல்ல முற்பட்ட முதியவர் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியா, சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த 62 வயதான சிவனு ராஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்

Related Articles

Latest Articles