வவுனியாவில் சிறுமி துஷ்பிரயோகம்: தந்தை கைது – இளைஞனுக்கு வலை

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15வயது சிறுமி ஒருவர் அவரின் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தந்தை இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரி வித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலகவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்துப் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிஸார் அந்தச் சிறு மியிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவரை வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின்போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மேற்படி சிறுமியை அவரின் தந்தை துஷ்பிர யோகம் செய்தமை தெரியவந்துள்ளது. அத்துடன் அந்தச் சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிறுமி யைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இளைஞரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஓமந்தைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்படி தந்தை தனது மூத்த மகளை 2020 ஆம் ஆண்டு துஷ்பிரயோகம் செய்தமையையடுத்து கைது செய்யப்பட்டு பிணையில் விடு விக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles