வவுனியாவில் வழிபறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த அறுவர் கைது!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரண்டு மோட்டர் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வீதிகளில் செல்வோரிடம் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்களால் கடந்த 6 மாதங்களாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

வவுனியாவின் நெளுக்குளம், பம்பைமடு, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் வீதிகளில் செல்வோரை வழிமறித்து சங்கிலி அறுக்கப்பட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும், தம்பனை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை வழிமறித்து சங்கிலி அறுக்கப்டபட்டதாக பறயனாலங்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்திருந்த நிலையில் பறையனாலங்குளம், தம்பனை பகுதியில் சங்கிலி அறுத்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் பீ.அம்பாவிலவின் வழிகாட்டுதலில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திருல்பெல தலைமையிலான பொலிசாரும், பறையனாலங்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கசூன இணைந்து முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சம்பவங்களை ஒரு குழு திட்டமிட்டு மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அக்குழுவைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த குற்றச் செயல்களை செய்ய பயன்படுத்திய கார் ஒன்றும் இரண்டு மோட்டர் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

தம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், குட்செட் வீதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒருவருமாக 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொலிசாரால் கைப்பற்றப்பட்ட காரில் வைத்தியசாலை சேவையில் பணியாற்றுபவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles