வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மோசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு பொதுமக்களுக்குப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுகின்றன என்றும், அதற்குப் பொலிஸாரும் உடந்தை எனத் தெரிவித்தும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய செயற்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப் பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக தலை மையிலான குழுவினர், சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர் என சந்தேகிக்கப்படும் அறுவர் கை செய்யப்பட்டனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத் தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக, எதிர்வரும் நாள்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடு முன்வைக்குமாறு அறிவித்தார்.










