அரச நிறுவனங்களின் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது குறித்து பொது நிறுவனங்களுக்கான குழு கவலை தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.










