வாகன இறக்குமதி குறித்து ஆராய்ந்து வரும் அரசாங்கம்!

எதிர்காலத்தில் சில கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

இதுகுறித்து வாகன இறக்குமதிகளுடன் அரசாங்கம் விசேட சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளது.

வாகன இறக்குமதி துறையின் வர்த்தகர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வாகன இறக்குமதியாளர்கள் அந்நிய செலாவணி வீதத்தைப் பாதுகாக்கும் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது, இறக்குமதி ஒதுக்கீட்டிற்கான அதிகபட்ச டாலர் வீதத்தை நிர்ணயிப்பது மற்றும் பதிவுசெய்யப்பட்ட மற்றும் புதிய வாகன இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

வாகன இறக்குமதியாளர்களுக்கு மேலதிக திட்டங்களை சமர்ப்பிக்கவும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கவும் அரசாங்கம் இரண்டு வார கால அவகாசம் வழங்கியிருந்தது.

வெளிநாட்டு நாணயத்தின் மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், 2020 மார்ச்சில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாகனங்கள் இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டமை நினைவூட்டத்தக்கது.

Related Articles

Latest Articles