வாக்கு வேட்டைக்காக கசிப்பு வழங்கியதா தமிழரசுக் கட்சி?

“ கசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்து என்பதை அமைச்சர் பிமல் ரட்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்ட வேண்டும்”

இவ்வாறு வலியுறுத்தி சவால் விடுத்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

பிமல் ரத்நாயக்காவின் குற்றச் சாட்டுக்குப் பதிலளிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,

” சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் என்று பிழையான எண்ணத்தை அவர் கொண்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை நாடாளு மன்றத்தில் கடும் ஆவேசத்துடன் பேசிய பிமல் ரட்நாயக்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சி கசிப்பும் பணமும் வழங்கி தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்றதாக குறிப்பிட்டார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சாத் வீகக் கட்சி மாத்திரமல்ல, சமூக அக்க றையுள்ள கட்சியுமாகும். அது அமைச்சர் பிமல் ரத்நாயக்காவுக்கு தெரிய வில்லை.” – என்று குறிப்பிட்டார்.

75 ஆண்டுகளுக்கு மேலான தமிழ் அரசுக் கட்சியின் வர லாற்றை அமைச்சர் பிமல் ரத்நாயக்கா எடுத்துப் பார்க்க வேண்டும்.
மது ஒழிப்புக்காக இயக்கத்தை கட்சி கொண்டுள்ளதுடன் ,இது தொடர்பில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles