எம்பிலிபிட்டிய , மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 18 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் தென்னை நார் உற்பத்தித் தொழில் செய்து வந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி
