” புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது.எனவே, ஆசிர்வாதம் பெறுவதற்கு எவரும் விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம்.” – என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைத்தார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எனவே, புதிய அமைச்சரவையை நாம் ஏற்கமாட்டோம். ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம். 20 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.” – என்றார்.