விக்டோரியா மாநில பிரீமியருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், விக்டோரியா மாநில பிரீமியர் ஜசிந்தாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கை மற்றும் விக்டோரியா மாநிலத்துக்கு இடையிலான அரசியல், பொருளாதார, கல்வி மற்றுமு; கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிலேயே மிக அதிகமான எண்ணிக்கையிலான இலங்கை வம்சாவளியினர் விக்டோரியா மாநிலத்தில்தான் வசித்து வருகின்றனர் என பிரீமியர் ஜசிந்தா ஆலன் சுட்டிக்காட்டினார்.

விக்டோரியா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கைச் சமூகம் வழங்கி வரும் பங்களிப்பையும் அவர் பெரிதும் பாராட்டினார்.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு இந்த ஆண்டுடன் 79 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்தச் சிறப்புமிக்க தருணத்தில், இலங்கை – விக்டோரியா இடையிலான பரஸ்பர உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின என்று அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles