விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று!

விசேட நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது.

அரசாங்கத்தினால் நிதி செயல்நுணுக்கக் கூற்று ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே இவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது.

நிலையியற் கட்டளை 16ற்கு அமைய பிரதமரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் நாடாளுமன்றம் இன்று கூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப 4.30 மணிவரை நடைபெறவுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles