விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்த சுற்றுலா பயணி

வெலிகம, கும்பல்கம குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணி ஒருவர் விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(2) பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணி விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

33 வயதான இந்த எகிப்திய சுற்றுலாப் பயணி சுமார் மூன்று வருடங்களாக இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும், ஒரு மாத காலத்துக்கான சுற்றுலா விடுதிக்கு செலுத்த வேண்டிய பணத்தை குறித்த சுற்றுலா பயணி செலுத்தத் தவறியுள்ளார்.

இந்நிலையில் விடுதி உரிமையாளர் அதனை வாங்குவதற்கு முற்பட்ட பொழுது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணையின் பின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த சுற்றுலா பயணி தாம் தங்கியிருந்த அறையில் இருந்த படுக்கைக்கு தீ வைத்துவிட்டு, எரிவாயு சிலிண்டரை அந்த இடத்தில் வீசிவிட்டு அவரும் தீயில் குதித்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

வெலிகம தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வந்து சுற்றுலா பயணியை தீயில் இருந்து மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles