தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை விடுத்துள்ள மஹிந்த தேசப்பிரிய, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்படவுள்ளார் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஏனைய ஆணைக்குழுக்களுக்கான தவிசாளர்களின் பெயர் பட்டியலையும் ஜனாதிபதி இறுதிப்படுத்தியுள்ளார் என தெரியவருகின்றது.
இதன்படி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஈவா வனசுந்தரவும், அரச சேவைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவிக்கு உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜகத் பாலபடபெந்தியும், நிதி ஆணைக்குழுவின் தவிசாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரவை செயலாளர் அபேசிங்கவும் நியமிக்கப்படவுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் ஆளுநர் கலாநிதி ஜயத் பாலசூரியவும் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பேரவை அனுமதித்த பின்னர் , அடுத்த வாரத்துக்குள் இந்நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கப்படவுள்ளன.