ஆஸ்திரேலிய மண்ணில் இருந்து முதலாவது விண்கலம் 2024 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது. Gold Coast தளமாகக் கொண்டு இயங்கும் Gilmour Space எனும் நிறுவனத்தால் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
25 மீட்டர் உயரமும், 30 தொன் எடையும் கொண்ட இந்த ராக்கெட்டுக்கு Eris என பெயரிடப்பட்டுள்ளதுடன், 500 கிலோ மீற்றர் உயரத்தில் உள்ள பூமத்திய ரேகை சுற்றுப் பாதையில், குயின்ஸ்லாந்தில் இருந்து ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
2023 ஆம் ஆண்டிலேயே இந்த விண்கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இறுதி அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் அடுத்த வருடம் ஏவப்படுகின்றது. இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சி வெற்றியளித்தால் விண்கல தொழில்நுட்பத்தை அணுகும் 12 ஆவது நாடாக ஆஸ்திரேலிய மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.