பதுளை, பண்டாரவளை வீதியில் கும்பல்வெல பகுதியில் இன்று (9) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வேனொன்றும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவின் பின்பகுதியில் பயணித்த பயணியொருவருமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.