விபத்தில் இருவர் பலி: ஓமந்தையில் சோகம்

வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருபர் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சைக்கிளில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் ஓட்டுநரும், சைக்கிளில் பயணித்தவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

Related Articles

Latest Articles