எல்பிட்டிய பிரதான வீதியில் கெடபல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஆட்டோவொன்றும், கொள்கலன் வாகனமொன்றும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மூவர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையிலும் கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஆட்டோ சாரதியான கலிங்க நிஹால் சோமரத்ன என்ற 68 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையும் அவரது 10 வயது பேரனும் 07 வயது பேத்தியுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஆட்டோ சாரதியின் மனைவி (61) மற்றும் அவரது மகள் (35) ஆகியோர் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அவரது பத்து வயது பேத்தி எல்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.










