அநுராதபும் தலாவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
அனுராதபுரம் – குருநாகல் பிராதன வீதியில் தலாவ பகுதியில் பாரவூர்தியும், வேனும் மோதியதில் இந்த விபத்துச் இடம்பெற்றுள்ளது.
வேனில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேன் பயணித்துக்கொண்டிருந்துள்ளது.
லொறி சாரதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
