விபத்தில் நால்வர் பலி – மூவர் படுகாயம்!

தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு மீண்டும் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வாகனமொன்றே, லொறியொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானது.

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த
மௌலானா அகமது (சாரதி) (46), ஜைனு அஹப்துல் சாபா (46), அகமது மௌலானா (43), அப்துல் ரஹ்மான் முகமது ரசீம் (36) ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர.

காயமடைந்தவர்களில் மூவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles