பதுளை- மொனராகலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மீதும்பிட்டிய, கலபொட பிரிவில் வசித்து வந்த தந்தை ஆறுமுகம் மனோகரன், மகன் மனோகரன் ஹிரோஷன் ஆகியோரின் இறுதிக் கிரியைகள் நேற்று( 23) மாலை நடைபெற்று, ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.


பசறை பகுதியில் ஏற்பட்ட விபத்து மரணங்களால் பிரதேச மக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். மீதும்பிட்டிய நகரம் வெள்ளைக் கொடிகள் நிறைந்தது சோக மயமாக காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.
