விபத்தில் யுவதி பலி: கண்டியில் சோகம்!

கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள், தனியார் பஸ்சுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த யுவதி கீழே விழுந்துள்ளார்.

அப்போது மற்றுமொரு வானத்தில் சிக்குண்டே அவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. விபத்தில் தந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

Related Articles

Latest Articles