விபத்தில் 23 வயது இளைஞன் பலி: யாழில் சோகம்!

யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 23 வயதான உதயகுமார் விதுஷன எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். கரவெட்டியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன எனும் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞர், வீதியில் மாடுகளைச் கூட்டிச்சென்ற இளைஞருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரும், மாடுகளை கூட்டிச் சென்ற இளைஞரும் படுகாயமடைந்த நிலையில், வீதியில் சென்றவர்கள் இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
எனினும், மாடுகளை கூட்டிச் சென்ற இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles